Tags : Vetrimaran

News Tamil News

50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க் மினிட்ஸை கடந்த “விடுதலை”!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என நட்சத்திரங்களில் சிலரின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரிதாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது. வெளியான மிகக் குறைவான நேரத்திற்குள்ளாக 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க மினிட்ஸை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.(ஸ்ட்ரிமீங் மினிட்ஸ் என்பது ஒரு […]Read More

News Tamil News

வாடிவாசல்: லண்டனில் வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மாதம் வெளியானது. இரண்டாம் பாகம் வெகு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. இரண்டு பாகங்களின் வேலைகளையும் முடித்துவிட்ட வெற்றிமாறன், அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறார். இதில், சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டெஸ்ட் ஷூட் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் […]Read More

News Tamil News

வட சென்னை 2 எப்போது.? முக்கிய அப்டேட்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதில், இரண்டு படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. அதை முடித்ததும் கண்டிப்பாக வட சென்னை 2 வேலைகளை ஆரம்பிக்க உள்ளேன் என்று கூறியிருக்கிறார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் […]Read More

News Tamil News

விடுதலை படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளிவந்த நிலையில், மிகப்பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்றதால் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டிருக்க, நான்கு நாட்களீல் மட்டும் இதுவரை சுமார் 22 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசளித்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், இப்படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றினை அளித்துள்ளார். படம் வெற்றி பெற்றால் உதவி இயக்குனர்களுக்கு கார் அல்லது பைக் கொடுப்பது இயக்குனர்களின் வழக்கம். ஆனால், வெற்றிமாறனோ படம் வெளிவருவதற்கு முன்பே படத்தில் பணிபுரிந்த சுமார் 25 உதவி இயக்குனர்களுக்கு செங்கல்பட்டு […]Read More

News Tamil News

மாஸ் காட்டும் விடுதலை டிக்கெட் புக்கிங்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் அதிவேகமாக நிரம்பி வருகிறது. வெற்றிமாறனின் இயக்கம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பதால் மேலும் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது. அதீத எதிர்பார்ப்பில் நாளை இப்படம் திரைக்கு […]Read More

News Tamil News

வெற்றிமாறன் படத்தில் தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர்!?

விடுதலை படத்தின் கடைசி கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தினை முடித்ததும் வாடிவாசல் படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வாடிவாசலை முடித்த கையோடு தனுஷ் மற்றும் ஜுனியர் என் டி ஆரை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் உலா வந்த வண்ணம் இருக்கிறது. இந்த செய்தியில் துளி அளவும் உண்மை இல்லை என்று வெற்றிமாறன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொய்யான செய்தி […]Read More

News Tamil News

கமலை இயக்கும் வெற்றிமாறன்.!?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தினை இயக்கிமுடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் பாகம் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவாகவே கமலை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

விடுதலை படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் விடுதலை. ர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் நீளம் கருதி, படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ஆரம்பித்தார் வெற்றிமாறன். இதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டார். ஒருவழியாக தற்போதுஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். […]Read More

News Tamil News

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு; வெற்றிமாறன் இயக்குனர்.?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை படமாக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். அதற்காக இயக்குனரை தேர்வு செய்யும் படலத்தில் இருக்கிறார்களாம் திமுகவினர். இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பாக இதை செய்து முடிப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் எண்ணுகிறாராம். அதற்காக வெற்றிமாறனிடம் பேச்சு வார்த்தையை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் இதை ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பது போகபோக தான் தெரியும். அவர் ஓகே சொல்லும் […]Read More